பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் செவிலியர் கல்லுாரியில் நீரிழிவு பரிசோதனை முகாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மயிலம்; உலக நீரிழிவு நாளை முன்னிட்டு மயிலம் கல்விக் குழுமத்தின் அங்கமான மயிலம் செவிலியர் கல்லுாரியில் நீரழிவு பரிசோதனை முகாம் நடந்தது.நிகழ்ச்சியில், மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், மயிலம் பொறியல் கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினர்.கல்லுாரி டீன் ராஜப்பன், மயிலம் செவிலியர்

மயிலம்; உலக நீரிழிவு நாளை முன்னிட்டு மயிலம் கல்விக் குழுமத்தின் அங்கமான மயிலம் செவிலியர் கல்லுாரியில் நீரழிவு பரிசோதனை முகாம் நடந்தது.நிகழ்ச்சியில், மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், மயிலம் பொறியல் கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினர்.கல்லுாரி டீன் ராஜப்பன், மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.உலக நீரிழிவு நாளையொட்டி, நீரிழிவு நோய் தலைப்பில் மாணவர்களுக்கு வினாடி, வினா, கோலப்போட்டி, போஸ்டர் தயாரித்தல், நீரழிவு நோயாளிகளுக்கான உணவு தயாரிப்பு போட்டி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.தொடர்ந்து பரிசோதனை முகாமில் உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது.மேலும் நீரிழிவு நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X