இறந்த கைதியின் குடும்பத்திற்கு சிறை நிர்வாகம் ரூ.5 லட்சம் நிதியுதவி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இறந்த கைதியின் குடும்பத்திற்கு சிறை நிர்வாகம் ரூ.5 லட்சம் நிதியுதவி

Added : நவ 22, 2020
Share
பாகூர்: மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதியின் குடும்பத்திற்கு, சிறை துறை சார்பில், ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, 26; இவரை, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி பைக் திருட்டு வழக்கில் பாகூர் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.அங்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தி,

பாகூர்: மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதியின் குடும்பத்திற்கு, சிறை துறை சார்பில், ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, 26; இவரை, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி பைக் திருட்டு வழக்கில் பாகூர் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.அங்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தி, புதுச் சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக குற்றம் சாட்டினர்.இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.அதனையொட்டி, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பாகூர் அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப் இன்ஸ்பெக்டர் திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையம், ஜெயமூர்த்தி குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிதி உதவி அளித்திட புதுச்சேரி சிறைத் துறைக்கு உத்தரவிட்டது. அதனையடுத்து சிறை அதிகாரிகள் அரசிடம் அனுமதி பெற்று, ஜெயமூர்த்தியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கினர். இதற்கான காசோலையை, சிறை கண்காணிப்பாளர் கோபிநாத், ஜெயமூர்த்தியின் மனைவி கவுசல்யாவிடம் நேற்று வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X