அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பாணியில் உதயநிதி உளறல்

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாணியில், அவரது மகன் உதயநிதியும் மேடையில் உளறியது, சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவ்வப்போது மேடைகளில் பேசும்போது, கவனக்குறைவால் உளறுவது வழக்கம். 'துண்டு சீட்டு இல்லாமல், ஸ்டாலின் பேசமாட்டார்' என, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், அவரை விமர்சனம் செய்கின்றனர். தேர்தல் பிரசாரம்ஸ்டாலினின்

சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாணியில், அவரது மகன் உதயநிதியும் மேடையில் உளறியது, சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவ்வப்போது மேடைகளில் பேசும்போது, கவனக்குறைவால் உளறுவது வழக்கம். 'துண்டு சீட்டு இல்லாமல், ஸ்டாலின் பேசமாட்டார்' என, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், அவரை விமர்சனம் செய்கின்றனர்.


தேர்தல் பிரசாரம்

ஸ்டாலினின் பேச்சுகள் சமூக வலைதளங்களில், 'மீம்ஸ், வீடியோ' வடிவில், கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. தற்போது, ஸ்டாலின் பாணியில், அவரது மகனும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதியும் உளற ஆரம்பித்து உள்ளார். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இப்போதே, உதயநிதி தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டார். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், இரண்டு நாட்களாக, போலீசாரின் தடையை மீறி, அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது, ஒரு மேடையில் பேசிய உதயநிதி, 'இங்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது, ஒன்று மட்டும் நிச்சயம்; 2001ல், தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும். தி.மு.க., தலைவர் முதல்வர் ஆவார்' எனக் கூறினார். அடுத்தாண்டு, 2021 தேர்தலை, 2001 தேர்தல் என, உதயநிதி உளறியதை கேட்டு, தி.மு.க., தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது, உதயநிதி யின் உளறல்கள், 'மீம்ஸ், வீடியோ' என, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகிஉள்ளது.


மீண்டும் கைது

இந்நிலையில், நேற்று காலை, வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்ட உதயநிதி, நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தார். பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி, அங்கிருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின், விசைப்படகில் முகத்துவாரம் வரை சென்று, மீனவர்களிடம் கலந்துரையாடினார்.

படகில் இருந்து இறங்கிய உதயநிதியை, போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரை மணி நேரம் நடந்த பேச்சுக்கு பின், உதய நிதியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்தில், அவர் விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani - karur,இந்தியா
22-நவ-202011:52:56 IST Report Abuse
mani உளறல் உதயநிதி nallayirukkilla
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X