பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை வழக்கு ரவுடி உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு 

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: பெட்ரோல் பங்க் ஊழியரை கடத்தி கொலை செய்த வழக்கில், ரவுடி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ்,27; திருமணமாதவர். குருமாம்பேட் வழுதாவூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.கடந்த 18ம் தேதி, இரவு 11:30 மணிக்கு, பைக்கில் வந்த 4 பேர் கொண்ட

புதுச்சேரி: பெட்ரோல் பங்க் ஊழியரை கடத்தி கொலை செய்த வழக்கில், ரவுடி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ்,27; திருமணமாதவர். குருமாம்பேட் வழுதாவூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.கடந்த 18ம் தேதி, இரவு 11:30 மணிக்கு, பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்கில் இருந்த ஜெயபிரகாசை தாக்கி, பைக்கில் கடத்தி சென்றது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மேட்டுப்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில், வில்லியனுார் பைபாசில் ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் குமார், சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்தபோது, சண்முகாபுரத்தை சேர்ந்த சபரிநாதன்,26; டெம்போ ராஜா, 25; என்பது தெரிய வந்தது. அவர்கள் ஓட்டி வந்த பைக்கில் ரத்த கறை இருந்தது. விசாரணையில், பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயபிரகாசை, கடத்தி கொலை செய்து, தப்பி வந்ததை ஒப்புக் கொண்டனர்.இருவரையும் கைது செய்து, மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜெயபிரகாஷ் உடல், ஊசுட்டேரி பொறையூர் ரோடு, காலி மனை குட்டையில் இருந்து மீட்கப்பட்டது.கொலை வழக்கில் தொடர்புடைய, முத்தியால்பேட்டை ரவுடி எலி கார்த்திக், 26; மார்த்தான் ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.கொலை செய்தது ஏன்தீபாவளி அன்று, ஜெயபிரகாஷ் வீட்டின் அருகே, சபரிநாதன் மதுபானம் குடித்தார். அதனை ஜெயபிரகாஷ் கண்டித்து, சபரிநாதனை அடித்து விரட்டியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த சபரிநாதன், ரவுடி எலிகார்த்திக், மார்த்தான், டெம்போ ராஜா ஆகியோருடன் சேர்ந்து, ஜெயபிரகாசை கடத்தி சென்று கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X