பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படைக்கு நேர்காணல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 375 ஊர்க்காவல் பணியிடம் உள்ளது. இதில் 52 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப ஏற்கனவே விண்ணப்பித்து தகுதி வாய்ந்த 90பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஆயதப்படை மைதானத்தில் நடந்த நேர்காணலுக்கு மாவட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 375 ஊர்க்காவல் பணியிடம் உள்ளது. இதில் 52 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப ஏற்கனவே விண்ணப்பித்து தகுதி வாய்ந்த 90பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஆயதப்படை மைதானத்தில் நடந்த நேர்காணலுக்கு மாவட்ட எஸ்.பி., கார்த்திக் தலைமை வகித்தார். ஏ.டி., எஸ்.பி., ஜெயசிங், ஆயுதப்படை டி.எஸ்.பி., ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.விளையாட்டு, கல்வி, ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில்பயிற்சி வழங்கப்பட உள்ளதாக எஸ்.பி., கார்த்திக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X