அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்று உற்சாகமூட்டிய அமித் ஷா!

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பூரண கும்ப மரியாதை உட்பட, பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் அரசு விழாவில் பங்கேற்கவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும், நேற்று மதியம் சென்னை வந்தார். தனி விமானத்தில் சென்னை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை:சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பூரண கும்ப மரியாதை உட்பட, பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் அரசு விழாவில் பங்கேற்கவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும், நேற்று மதியம் சென்னை வந்தார். தனி விமானத்தில் சென்னை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.விமான நிலையத்தில் அவரை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., - தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பூரண கும்ப மரியாதையுடன் மட்டுமின்றி, மேள, தாளம் என, தமிழ் பாரம்பரியக் கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.விமான நிலையத்தை விட்டு வெளியேறி, காரில் வந்த அமித் ஷாவுக்கு, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், பா.ஜ., - அ.தி.மு.க., தொண்டர்கள் கூடி நின்று, உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைக் கண்ட அமித் ஷா, காரை நிறுத்தி கீழே இறங்கி,3 நிமிடங்கள் வரை சாலையில் நடந்து சென்று, தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

மீண்டும் மதியம், 2:05 மணிக்கு, காரில் ஏறி புறப்பட்டு, லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்றார். அவர் செல்லும் சாலையில், வாழை மரம், கரும்பு நடப்பட்டு, பசுமை சூழலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமித் ஷா, சென்னையில், சாலையில் நடந்து சென்றது, எதிர்க்கட்சியினர், 'கோ பேக் அமித் ஷா' என, 'ஹேஜ்டேக்' உருவாக்கி இருந்ததற்கு பதிலடி தரும் வகையில் அமைந்திருந்தது.அமித் ஷா சாலையில் நடந்து சென்ற செயல், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X