பொது செய்தி

இந்தியா

தீவிரவாத தாக்குதலை முறியடிக்க போலீசாருக்கு பயிற்சி

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு தொடர்பாக, நாளை 23ம் தேதி ஒத்திகை நடைபெறுவதைத் தொடர்ந்து, ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.டில்லி பார்லிமெண்ட் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது போல், புதுச்சேரி கடற்கரைச் சாலை தலைமை செயலகம், பிரெஞ்சு துணை துாதரகம், சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகை உள்ளிட்டவை மீது தீவிரவாத தாக்குதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு தொடர்பாக, நாளை 23ம் தேதி ஒத்திகை நடைபெறுவதைத் தொடர்ந்து, ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.டில்லி பார்லிமெண்ட் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது போல், புதுச்சேரி கடற்கரைச் சாலை தலைமை செயலகம், பிரெஞ்சு துணை துாதரகம், சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகை உள்ளிட்டவை மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், எவ்வாறு சமாளிப்பது, தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக, ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் சட்டசபை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்காக, சென்னை வண்டலுாரில் உள்ள நேஷ்னல் செக்யூரிட்டி கார்டு, மேஜர் ராஜேஷ் தாக்கூர் புதுச்சேரி வந்துள்ளார். நேற்று முன்தினம் சட்ட சபை காவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாளை 23ம் தேதி, பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடும் ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் செந்தில்முருகன் தலைமையிலான குழுவினர், சட்டசபை, தலைமை செயலகத்தில், ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X