பொது செய்தி

தமிழ்நாடு

உலக மீனவர் தினம்...

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் உலக மீனவர் தின விழாவில் மீன்துறை அதிகாரிகள், மீனவர்கள் பங்கேற்றனர். உலக மீனவர் தினத்தை யொட்டி ராமேஸ்வரம் துறைமுகவீதி கடற்கரை அருகில் உள்ள மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் விழா நடந்தது.இதில் மீனவர்களுக்கான கொடியை ஏற்றி வைத்து, கடல்வளம், மீன்வளத்தை பாதுகாக்க மீன்துறை அதிகாரிகள், மீனவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.பின் 50க்கு மேலான சிறிய

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் உலக மீனவர் தின விழாவில் மீன்துறை அதிகாரிகள், மீனவர்கள் பங்கேற்றனர்.

உலக மீனவர் தினத்தை யொட்டி ராமேஸ்வரம் துறைமுகவீதி கடற்கரை அருகில் உள்ள மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் விழா நடந்தது.இதில் மீனவர்களுக்கான கொடியை ஏற்றி வைத்து, கடல்வளம், மீன்வளத்தை பாதுகாக்க மீன்துறை அதிகாரிகள், மீனவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.பின் 50க்கு மேலான சிறிய ரக விசைப்படகு மீனவர்களுக்கு கடல் சீற்றத்தில் இருந்து தப்பிக்க மிதவை தெர்மாகோல் வழங்கினர்.விழாவில் ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குநர் இளம்வழுதி, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், கடல் அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தனமாரி, ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசு, சகாயம், ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X