சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
பாகூர்: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, கார் மோதி இறந்தார்.கன்னியக்கோவில் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மனைவி தாமரைவள்ளி,70; இவர் நேற்று முன்தினம் காலை புதுச்சேரி - கடலுார் சாலை, புதுநகர் சந்திப்பு அருகே மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சாலையை கடக்க முயன்றார்.அப்போது, பாகூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பி.ஒய் 01 பி 5151 என்ற பதிவெண் கொண்ட டொயோட்டா குவாலிஸ் கார் எதிர்பாராத

பாகூர்: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, கார் மோதி இறந்தார்.கன்னியக்கோவில் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மனைவி தாமரைவள்ளி,70; இவர் நேற்று முன்தினம் காலை புதுச்சேரி - கடலுார் சாலை, புதுநகர் சந்திப்பு அருகே மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சாலையை கடக்க முயன்றார்.அப்போது, பாகூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பி.ஒய் 01 பி 5151 என்ற பதிவெண் கொண்ட டொயோட்டா குவாலிஸ் கார் எதிர்பாராத விதமாக, தாமரைவள்ளி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் சுப்ரமணி கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X