சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமித் ஷா கார் மீது பதாகை எறிந்தவர் கைது

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின் போது, பதாகையை துாக்கி எறிந்த நபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு அரசுத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மதியம் தமிழகம் வருகை தந்தார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு காரில்

சென்னை:உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின் போது, பதாகையை துாக்கி எறிந்த நபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு அரசுத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மதியம் தமிழகம் வருகை தந்தார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு காரில் சென்ற போது, பா.ஜ.,வினர் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

மீனம்பாக்கம் பகுதியில், பதாகையுடன் நின்றிருந்த ஒருவர், அமித் ஷா சென்ற காரின் மீது, பதாகையை எறிந்து கோஷமிட்டார்.இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர், நங்கநல்லுாரைச் சேர்ந்த துரைராஜ், 60, என தெரிய வந்தது.

இவர், செப்டம்பரில் நங்கநல்லுாரில் நடந்த, பா.ஜ., ஆர்ப்பாட்டத்தின் போது, 'தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்த, 15 லட்சம் ரூபாய் பணம் எங்கே?' எனக் கேட்டு, கூச்சலிட்டு சலசலப்பை ஏற்படுத்தியவர்.அப்போது, அவர் கைது செய்யப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைக்கப் பட்டார். பின், தி.நகரில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போதும் பிரச்னை செய்த அவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-202013:42:53 IST Report Abuse
தமிழவேல் இதுபோன்ற அவமதிப்பு தேவையற்றது. இதனால் வெறுப்புணர்வுதான் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X