பொது செய்தி

இந்தியா

அரியாங்குப்பத்தில் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அரியாங்குப்பத்தில் உள்ள செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதியில் 6ம் ஆண்டு கந்தர் சஷ்டி பெருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், பக்தர்களுக்கு காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கி

புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அரியாங்குப்பத்தில் உள்ள செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதியில் 6ம் ஆண்டு கந்தர் சஷ்டி பெருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், பக்தர்களுக்கு காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கி வைத்தார்.பெருவிழாவில் தினசரி உற்சவங்கள் நடந்து வந்தது. சூரசம்ஹாரமும், சம்ஹார வேலுக்கு பாலாபிஷேகமும் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, சிவசக்தி வேலன் ஆன்மிகக் குழுவின் தலைவர் ருத்ரகுமாரன், கோவில் அறங்காவல் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் காமராஜ், பொருளாளர் சிவநேசன், உறுப்பினர் வீராசாமி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X