சம்பவம் செய்தி

தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் வசதியில்லாத எஸ்.புதுார்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியத்துக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் விபத்து, அவசர காலங்களில் உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 100 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களை உள்ளடக்கிய இவ்வொன்றியத்தில் விபத்துகளும், பாம்புக்கடி சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களையோ அல்லது கர்ப்பிணிகளையோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு

சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியத்துக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் விபத்து, அவசர காலங்களில் உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

100 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களை உள்ளடக்கிய இவ்வொன்றியத்தில் விபத்துகளும், பாம்புக்கடி சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களையோ அல்லது கர்ப்பிணிகளையோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால்குறித்த நேரத்தில் இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை.கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த அரை மணி நேரத்துக்கு பிறகே அவ்வாகனங்கள் வருகின்றன.

இதனால் உயிருக்கு போராடுவர்களுக்கு முதலுதவியை அளிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் 20 கி.மீ.,க்கு அப்பால் உள்ள சிங்கம்புணரி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வரவேண்டியுள்ளது. எஸ்.புதுார் மக்கள் பயன் பெறும் வகையில் ஒன்றியத்தின் மையப்பகுதியான எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X