பொது செய்தி

இந்தியா

சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைக்கான இறுதி போட்டி

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: அடல் இன்குபேஷன் சென்டரின் சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைக்கான இறுதி போட்டி காணொலியில் நடந்தது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அடல் இன்குபேஷன் சென்டர் என்ற, தொழில் வழிகாட்டு மையம் இயங்கி வருகின்றது.இம்மையம் தொழில் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் முனைவோரின் சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைகளை சமூகத்திற்கு நன்மை அளிக்கும் வகையில்

புதுச்சேரி: அடல் இன்குபேஷன் சென்டரின் சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைக்கான இறுதி போட்டி காணொலியில் நடந்தது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அடல் இன்குபேஷன் சென்டர் என்ற, தொழில் வழிகாட்டு மையம் இயங்கி வருகின்றது.இம்மையம் தொழில் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் முனைவோரின் சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைகளை சமூகத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் நடைமுறையில் கொண்டுவர ஊக்குவித்து உதவி வருகின்றது.இம்மையம் கோவிட் புத்தாக்க சவால் போட்டியை அண்மையில் நடத்தியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 100 பேர் தங்களுடைய புதிய கண்டுபிடிப்பு சிந்தனைகளை அனுப்பி இருந்தனர்.இவர்களுக்கான இறுதி போட்டி காணொலி மூலம் நடந்தது. புதுச்சேரி தொழில்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அடல் தொழில் வழிகாட்டி மைய செயலாக்க இயக்குனர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.தொடர்ந்து சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைகளை பதிவு செய்திருந்தவர் கள் தங்களுடைய கண்டுபிடிப்புகள் குறித்து காணொலியில் பேசி, நடுவர் குழு எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.இறுதியில் நேரடி தொடர்பில்லா உடல்வெப்ப நிலை சாதனம், உள்ளூர் பொருட்களை தேவைக்கேற்ப வாங்கும் செயலி, நீர் அடிப்படையிலான தொற்று நீக்கி குறித்த ஆய்வு சிந்தனைகள் கோவிட் புத்தாக்க சவால் போட்டியில் சிறந்த தொழில் கண்டுபிடிப்பு யோசனைகளாக தேர்வு செய்யப்பட்டன.நடுவர்களாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஸ்ரீதர், ேஹமகுமார், சிவக்குமார் ஆகியோர் பணியாற்றினர். சிறந்த தொழில் கண்டுபிடிப்பு சிந்தனைகளை முன் வைத்தவர்கள், தங்களுடைய கண்டுபிடிப்புகளை செயல்வடிவத்திற்கு கொண்டுவர அடல் இங்குபேஷன் சென்டர் உதவிகளை செய்ய உள்ளது.ரொக்க பரிசு விரைவில் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X