பொது செய்தி

தமிழ்நாடு

முகாம் 'வெறிச்'; அதிகாரி 'அட்வைஸ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், வாக்காளர்களின் ஆர்வம் குறைவாக இருந்தது.வாக்காளர் பட்டியல், சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் நேற்று மாவட்டம் முழுக்க நடந்தது. வரைவு வாக்காளர் பட்டியல், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்கள், பத்திர பதிவு அலுவலகம், ஆர்.டி.ஓ., கமிஷனர் அலுவலகம், தாலுகா, மாநகராட்சி மண்டல மற்றும் நகராட்சி அலுவலகங்களில், பொதுமக்கள்
 முகாம் 'வெறிச்'; அதிகாரி 'அட்வைஸ்'

பல்லடம்:பல்லடத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், வாக்காளர்களின் ஆர்வம் குறைவாக இருந்தது.வாக்காளர் பட்டியல், சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் நேற்று மாவட்டம் முழுக்க நடந்தது. வரைவு வாக்காளர் பட்டியல், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்கள், பத்திர பதிவு அலுவலகம், ஆர்.டி.ஓ., கமிஷனர் அலுவலகம், தாலுகா, மாநகராட்சி மண்டல மற்றும் நகராட்சி அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.பல்லடத்தில், நேற்று நடந்த சிறப்பு முகாமை சப்-கலெக்டர் கணேஷ், ஆய்வு செய்தார். அவர், ஆய்வு மேற்கொண்ட ஓட்டுச்சாவடி மையத்தில், சொற்ப அளவு பொதுமக்களே பங்கேற்றிருந்தனர்.அவர், அதிகாரிகளிடம் கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யவே, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு, இதுகுறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகாமில், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், அவர்களது பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். புதிதாக திருமணமான, புதிய வாக்காளர்கள் ஆதாருடன், பள்ளி மாற்று சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும்,'' என்றார்.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''ஆட்டோ மூலம் பிரசாரம் செய்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.ஆய்வின் போது, தாசில்தார் தேவராஜ், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X