பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிறப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சிவகங்கை : ''மாவட்டத்தில் 15 ஆயிரத்து 223 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை கிடைக்கவில்லை,'' என மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி மோகனா தெரிவித்தார் ..அவர் கூறியதாவது:கொரோனா ஊரடங்கால் தேசிய அடையாள அட்டை பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிக்கும் சிறப்பு உதவித்தொகை ரூ.1000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற முடியாத அடையாள அட்டை

சிவகங்கை : ''மாவட்டத்தில் 15 ஆயிரத்து 223 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை கிடைக்கவில்லை,'' என மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி மோகனா தெரிவித்தார் .

.அவர் கூறியதாவது:கொரோனா ஊரடங்கால் தேசிய அடையாள அட்டை பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிக்கும் சிறப்பு உதவித்தொகை ரூ.1000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற முடியாத அடையாள அட்டை இல்லாதோர், சான்று பெற இயலாதோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.சிவகங்கை மட்டுமின்றி அனைத்து தாலுகாவில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மாவட்ட அளவில் உள்ள 31 ஆயிரத்து 356 மாற்றுத்திறனாளிகளில், 16 ஆயிரத்து 133 பேர் மட்டுமே உதவித்தொகை பெற்றுள்ளனர். இன்னும் 15 ஆயிரத்து 223 பேர் பெறவில்லை.எனவே சிறப்பு உதவித்தொகை பெறாதோர் ஊராட்சி செயலர், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி கமிஷனரிடம் உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்றினை பெற்று, ஆதார் கார்டு நகலுடன் சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இது குறித்த புகாரை 95972 69776 என்ற வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X