சுகாதாரத் துறை ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருபுவனை: குடிப்பதை மனைவி கண்டித்ததால், விரக்தியடைந்த சுகாதாரத்துறை ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருபுவனை அடுத்த பி.எஸ்.பாளையம், குமரன் நகரை சேர்ந்தவர் கருணன் மகன் தேவராசு,47; இவர் தமிழக சுகாதாரத்துறையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 20ம் தேதி மாலை குடித்துவிட்டு

திருபுவனை: குடிப்பதை மனைவி கண்டித்ததால், விரக்தியடைந்த சுகாதாரத்துறை ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை அடுத்த பி.எஸ்.பாளையம், குமரன் நகரை சேர்ந்தவர் கருணன் மகன் தேவராசு,47; இவர் தமிழக சுகாதாரத்துறையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 20ம் தேதி மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அதனை அவரது மனைவி கண்டித்துவிட்டு, மகன்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.இதனால் மனமுடைந்த தேவராசு வீட்டினுள் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X