பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி பயிரை தாக்கும் நூற்புழு: தீர்வு சொல்லும் வேளாண் அதிகாரிகள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
பல்லடம்;காய்கறி பயிரை தாக்கும், நுாற்புழுக்களில் இருந்து பயிர்களை பாதுகாக்க, வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, பல்லடம் அருகே உகாயனுார் கிராமத்தில் நடந்தது. வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் பொம்முராஜ் தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் தியாகராஜன் முன்னிலை

பல்லடம்;காய்கறி பயிரை தாக்கும், நுாற்புழுக்களில் இருந்து பயிர்களை பாதுகாக்க, வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, பல்லடம் அருகே உகாயனுார் கிராமத்தில் நடந்தது. வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் பொம்முராஜ் தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கவிதா பேசியதாவது;காய்கறி பயிரான தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் தட்டைப்பயறு உள்ளிட்டவற்றில், நோய் தாக்குதலுக்கான ஆய்வு நடத்தப்பட்டது. மண் மற்றும் நீர் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 'மெலாய்டோகைன் இன்காக்னிடா' எனப்படும் வேர் முடிச்சு நுாற்புழு, பயிர்களை, அதிகளவில் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், பயிர் நிறம் மாறி, மகசூல் பாதிக்கப்படுகிறது. இந்த புழுக்களை,'மைக்ரோஸ்கோப்' மூலம் மட்டுமே காண முடியும். காய்கறி பயிரில், மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு, இவை முக்கிய காரணமாக உள்ளன.நுாற்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு செய்தல், கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு இடுதல், பயிர் சுழற்சி முறை ஆகியவற்றை கையாள வேண்டும். ஊடுபயிராக, மஞ்சள் நிற கேந்தி செடிகளை வளர்க்கலாம். பர்பூரியோசிலியம், லீலாசினம் ஆகிய பூஞ்சானக் கொல்லியை தெளிப்பதால், நுாற்புழுக்களை அழிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X