பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் தலைமுறை கவச உடை கண்டுபிடிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:சென்னை, ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி, தன் ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மருத்துவர்களை காக்க, அதிநவீன இரண்டாம் தலைமுறை கவச உடையை கண்டுபிடித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், 'பி.பி.இ., கிட்' எனப்படும், 'பிளாஸ்டிக்' கவச உடையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கவச உடை அணிவதால், பல அசவுகரியங்கள்

சென்னை:சென்னை, ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி, தன் ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மருத்துவர்களை காக்க, அதிநவீன இரண்டாம் தலைமுறை கவச உடையை கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், 'பி.பி.இ., கிட்' எனப்படும், 'பிளாஸ்டிக்' கவச உடையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கவச உடை அணிவதால், பல அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. அதனால், சிகிச்சை அளிப்பதில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல்வேறு அமைப்பினர், மாற்று கவச உடை தயாரிப்பது தொடர்பாக, ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இரண்டாம் தலைமுறை கவச உடையை, ஆவடி அதிவிரைவு படையின், 97வது படைப்பிரிவு தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ் கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை, நேற்று மாலை, படைப் பிரிவு அலுவலகத்தில் அறிமுகம் செய்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:

மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டாலும், அதையும் தாண்டி, ஜவுளி துறையில் உள்ள ஆர்வத்தால், ஓய்வு நேரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன். இதுவரை, 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, ஆராய்ச்சிக்காக செலவு செய்திருக்கிறேன்.கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்தபோது, மருத்துவர்கள் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் கவச உடைகளை பயன்படுத்தி, அவதிக்கு உள்ளாகினர். அந்த நேரத்தில் தான், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய, சென்னையில் எதிர்ப்பு கிளம்பியது.

இச்சம்பவத்திற்கு பின் தான், மருத்துவர்களை காக்க, நம்மால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என, கவச உடை தயாரிப்பில், தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். இந்த ஆராய்ச்சியில் என்னுடன், படைப் பிரிவின் மருத்துவர் சைதன்யா பங்களிப்பு மிகவும் முக்கியமானது.மார்ச் மாதம் முதல் துவங்கிய, இந்த ஆராய்ச்சியின் பலனாக, தற்போது, இரண்டாம் தலைமுறை கவச உடை உருவாகியுள்ளது.

இந்த கவச உடை, ஐ.சி.எம்.ஆர்., சோதனை உட்பட, பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது.இந்த கவச உடையை சுத்தப்படுத்தி, பலமுறை பயன்படுத்தலாம். மேலும், காற்று புகும் வகையிலும், நுண்ணுயிரிகளை தடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கவச உடை தயாரிப்பில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கு, நாங்கள் கண்டறிந்த தொழில்நுட்பத்தை அளிக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X