சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது 

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருக்கனுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த திருக்கனுார் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பிற்கு சென்றுள்ளார்.அங்கு மறைந்திருந்த கார்த்திக்

திருக்கனுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த திருக்கனுார் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பிற்கு சென்றுள்ளார்.அங்கு மறைந்திருந்த கார்த்திக் (எ) பெரம்பன், 36; என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன், சவுக்கு மரத்தில் அவர் அணிந்திருந்த துணியால் கட்டி உள்ளார். அப்போது, சிறுமி கூச்சலிடவே அச்சமடைந்த கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இரவு முழுதும் சவுக்குத் தோப்பில் கட்டப்பட்டிருந்த சிறுமியை, அதிகாலை அப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்கள் பார்த்து, வீட்டிற்கு அழைத்து வந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த திருக்கனுார் போலீசார், சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வராததால் வழக்கு பதிவு செய்யவில்லை.இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, சீனியர் எஸ்.பி., பிரதிக் ஷா கோத்ராவுக்கு, அப்பகுதியை சேர்ந்த சிலர் தகவல் அளித்துள்ளனர்.அதன்பேரில் நேற்று முன்தினம் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டார். அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் கட்டி வைத்த சம்பவம் உண்மை என தெரிய வந்தது. அதனையொட்டி, கார்த்திக்கை கைது செய்யவும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத திருக்கனுார் சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.இதனிடையே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் குறித்து திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஅரசியல் உள் நோக்கமா?வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 5 சிறுமிகள் கொத்தடிமைகளாக வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். தேசிய அளவில் பேசப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால், திருக்கனுாரில், சிறுமி பாலியல் செய்ய முயன்ற வழக்கில் புகார் ஏதும் இல்லாத நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடம் மாற்றம் செய்திருப்பது அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X