பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.250 கோடி மானியம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தில், 250 கோடி ரூபாயை விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அந்த கடைகளுக்கான வாடகை, ஊழியர் சம்பளம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்வதற்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும் மானியம்

சென்னை:கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தில், 250 கோடி ரூபாயை விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அந்த கடைகளுக்கான வாடகை, ஊழியர் சம்பளம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்வதற்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படுகிறது. அந்த மானியம், குறித்த காலத்தில் வழங்கப்படுவதில்லை.

ரேஷன் கடைகளில், ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட செலவை சமாளிக்க, 2018 - 19ம் நிதியாண்டிற்கான மானியத்தில் இருந்து, 398 கோடி ரூபாயை வழங்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, தற்போது, 250 கோடி ரூபாய் மானியம் விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மானியமாக வழங்கப்பட்டுள்ள நிதி, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில், நஷ்டத்தில் ரேஷன் கடைகளை நடத்தும் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X