காரைக்காலில் சாலை மறியல் தி.மு.க., அமைப்பாளர்கள் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
காரைக்கால்: தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து காரைக்காலில் மறியலில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ., உள்ளிட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி திருக்குவளையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார பயணத்தை துவக்கினார். அனுமதி பெறாத காரணத் தினால், உதயநிதி உள்ளிட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.அதனைக் கண்டித்து நேற்று

காரைக்கால்: தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து காரைக்காலில் மறியலில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ., உள்ளிட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி திருக்குவளையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார பயணத்தை துவக்கினார். அனுமதி பெறாத காரணத் தினால், உதயநிதி உள்ளிட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.அதனைக் கண்டித்து நேற்று காரைக்கால் மாவட்ட தி.மு.க., சார்பில் மதகடி அரசலாறு பாலம் அருகில் மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ., மற்றும் நாஜிம் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து வந்த காரைக் கால் நகர போலீசார், மறியலில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ., மற்றும் அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், நாஜிம் உள்ளிட்ட தி.மு.க., வினரை கைது செய்து, போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X