மைதானத்தில் ஆக்கிரமிப்பு சர்ச்சை

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: அரசு இடம் ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய மைதானத்தில் நடைபெற இருந்த டுவெண்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.புதுச்சேரி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் சீசெம் நிறுவனம், அரசு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளதாக புகார் எழுந்தது.அதனைத் தொடர்ந்து கவர்னரின் உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு இடங்களை

புதுச்சேரி: அரசு இடம் ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய மைதானத்தில் நடைபெற இருந்த டுவெண்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.புதுச்சேரி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் சீசெம் நிறுவனம், அரசு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளதாக புகார் எழுந்தது.அதனைத் தொடர்ந்து கவர்னரின் உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், மைதானத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அனுமதியின்றி அமைக்கப்பட்ட மைதானங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், கிரிக்கெட் மைதானத்தை சீசெம் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் ஏற்று நடத்தி வரும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி செயல்பாடு குறித்து சி.பி. சி.ஐ.டி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சர்ச்சைக் குள்ளான கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிட்டப்படி கடந்த 11ம் தேதி முதல் டுவெண்டி 20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வந்தது.இதற்கான போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் புதுச்சேரியில் தங்கி விளையாடி வந்தனர். முதல் சுற்று கிரிக்கெட் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடப்பதாக இருந்தது.காலை 9:00 மணிக்கு டஸ்கர்-லையன்ஸ் அணிக்கும், பகல் 2:00 மணிக்கு டைகர்ஸ்-பேந்தர்ஸ் அணிக்கும். மாலை 6:00 மணிக்கு லையன்ஸ்-ஷார்க்ஸ் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடப்பதாக இருந்ததுஇந்நிலையில் இந்த போட்டிகள் அனைத்தும் நேற்று திடீரென கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியால் ரத்து செய்யப்பட்டது.வரும் 27 ம் தேதி வரை பைனல் உள்பட மொத்தம் 33 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் இதுவரை 15 போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 18 போட்டிகளையும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால், கிரிக்கெட் போட்டிக்காக தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து வெளியூர் விளையாட்டு வீரர்களும் சோகத்துடன் ஓட்டலை காலி செய்துவிட்டு வெளியேறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X