பொது செய்தி

தமிழ்நாடு

'என்னது, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லுமா?' தூங்கி வழியும், ஸ்டேட் வங்கி நிர்வாகம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செலுத்தலாம் என்கிற ஸ்டேட் வங்கியின் பழைய பேனரால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைகின்றனர்.திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை இயங்குகிறது. வங்கி வளாகத்தில், பணம் செலுத்தும் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே, மெஷினை பயன்படுத்துவது குறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கடந்த 2017 ல், ஆயிரம்
 'என்னது, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லுமா?' தூங்கி வழியும், ஸ்டேட் வங்கி நிர்வாகம்

திருப்பூர்;ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செலுத்தலாம் என்கிற ஸ்டேட் வங்கியின் பழைய பேனரால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைகின்றனர்.திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை இயங்குகிறது. வங்கி வளாகத்தில், பணம் செலுத்தும் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே, மெஷினை பயன்படுத்துவது குறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கடந்த 2017 ல், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தடை செய்துவிட்டது.தற்போது, ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. அதற்குபதிலாக, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு பயன்பாட் டில் உள்ளன. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை செலுத்தும் வகையில், ஸ்டேட் வங்கியின் பணம் செலுத்தும் மெஷினில் தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் இன்னும், பழைய பேனரை மாற்றாமலேயே வைத்துள்ளனர்.பேனரில், 'ஆயிரம் ரூபாய், 500 ரூபாய்; 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் செலுத்த வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. காலாவதியான இந்த பேனரால், வாடிக்கையாளர்கள் குழப்பமடைகின்றனர். குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த பேனரை, ஸ்டேட் வங்கி உடனே அகற்றி, திருத் தப்பட்ட புதிய பேனரை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X