அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் சந்திப்பு

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
*நேற்று மாலை, 4:30 மணிக்கு, லீலா பேலஸ் ஓட்டலில் இருந்து அமித் ஷா, கலைவாணர் அரங்கம் சென்ற போது, ஓட்டலுக்கு வெளியே திரளாக திரண்டிருந்த பா.ஜ., தொண்டர்கள், 'பிரதமர் மோடி வாழ்க; அமித் ஷா வாழ்க' என, முழக்கமிட்டனர்* தமிழக பா.ஜ., நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை, லீலா பேலஸ் ஓட்டலில், நேற்று மாலை நடந்ததுl கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாநில, மாவட்ட நிர்வாகிகள், போலீசாரின் பலத்த

*நேற்று மாலை, 4:30 மணிக்கு, லீலா பேலஸ் ஓட்டலில் இருந்து அமித் ஷா, கலைவாணர் அரங்கம் சென்ற போது, ஓட்டலுக்கு வெளியே திரளாக திரண்டிருந்த பா.ஜ., தொண்டர்கள், 'பிரதமர் மோடி வாழ்க; அமித் ஷா வாழ்க' என, முழக்கமிட்டனர்

* தமிழக பா.ஜ., நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை, லீலா பேலஸ் ஓட்டலில், நேற்று மாலை நடந்ததுl கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாநில, மாவட்ட நிர்வாகிகள், போலீசாரின் பலத்த சோதனைக்கு பின், அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்

* நிர்வாகிகளுக்கு, 'சானிடைசர்' பாட்டில் வழங்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும், கழுத்தில் அணிந்து கொள்வதற்காக, கட்சி கொடியின் வண்ணத்தினாலான துண்டுகள் வழங்கப்பட்டனl கூட்டம் துவங்கும் முன், அனைத்துநிர்வாகிகளிடமும், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் நலம் விசாரித்தனர்

* நடிகையர் குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன், பாஜ., மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், 'போட்டோ' எடுத்து கொண்டனர்

* அமித் ஷா பேசும்போது, அதை, 'ஆடியோ, வீடியோ' வாயிலாக பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை, எச்.ராஜா, மைக்கில் தெரிவித்தார்
* கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., நிர்வாகிகள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும், இரவு விருந்து அளிக்கப்பட்டது

* இன்று காலை, 10:00 மணிக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர்களுடன், அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-202009:09:22 IST Report Abuse
Chennai B.S கழகங்களுக்கு கலக்கம் வந்து இருக்கும் என் என்றால் கலகக்காரன் வந்துண்டன்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X