கொத்தடிமை சிறுமிகள் பாலியல் வழக்கு

Added : நவ 22, 2020
Share
Advertisement
வில்லியனுார்: வில்லியனுார் அருகே கொத்தடிமைகளாக வைத்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை போலீசார், காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.கரிக்கலாம்பாக்கத்தில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த ஐந்து சிறுமிகளை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமிகள் அனைவரும்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கொத்தடிமைகளாக வைத்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை போலீசார், காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.கரிக்கலாம்பாக்கத்தில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த ஐந்து சிறுமிகளை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமிகள் அனைவரும் கொத்தடிமையாக வைத்து, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்ததும், அதில் 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன்,55; மற்றும் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியப்பன், சரத் (எ) சரத்குமார், பசுபதி, அய்யனார் உள்ளிட்ட 6 பேரை, மங்கலம் போலீசார், நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.இன்று, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இடங்களை அடையாளம் காண போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X