காங்., நிர்வாகியை கொல்ல முயற்சி 8 பேர் போலீசில் சிக்கினர்

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: காங்., பொதுச் செயலரை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.முதலியார்பேட்டை, வயல்வெளி நகரைச் சேர்ந்தவர் ஏ.கே.டி. ஆறுமுகம். காங்., பொதுச் செயலரான இவர், கடந்த 19 ம் தேதி இரவு, கம்பன் நகர் வழியாக காரில் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே சென்றபோது, மர்ம கும்பல் காரை சுற்றி வளைத்து தாக்கியது. டிரைவர் காரை வேகமாக எடுத்து

புதுச்சேரி: காங்., பொதுச் செயலரை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.முதலியார்பேட்டை, வயல்வெளி நகரைச் சேர்ந்தவர் ஏ.கே.டி. ஆறுமுகம். காங்., பொதுச் செயலரான இவர், கடந்த 19 ம் தேதி இரவு, கம்பன் நகர் வழியாக காரில் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே சென்றபோது, மர்ம கும்பல் காரை சுற்றி வளைத்து தாக்கியது. டிரைவர் காரை வேகமாக எடுத்து சென்றதால், ஆறுமுகம் உயிர் தப்பினார்.இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், ஆறுமுகத்தை கொல்ல முயன்ற வழக்கு தொடர்பாக நேற்று காலை மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அதனை அறிந்த மேலும், ஐந்து பேர் நேற்று மாலை முதலியார்பேட்டை போலீசில் சரணடைந்தனர்.அவர்களிடம், கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X