சிவகங்கை : 'டெங்கு' வந்த பின் கிராமங்களில் சுகாதார பணி செய்வதை விட, வருவதற்கு முன் சுகாதாரத்துறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும்,'' என கலெக்டர் மதுசூதன் ரெட்டிஎச்சரிக்கை விடுத்தார்.
சிவகங்கை அருகேஒக்கூர், கீழப்பூங்குடி, இடையமேலுார், தமறாக்கி ஊராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார, துணை சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கிராமங்களில் வீடு வீடாக சென்று குடிநீரை முறையாக வைத்துள்ளார்களா என பார்வையிட்டார். பின்னர் கிராம ஊராட்சி தலைவர்களிடம், டெங்கு காய்ச்சல் பரவுவதால், கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் மேல், தரைமட்ட தொட்டிகளை அடிக்கடி குளோரினேஷன் செய்ய வேண்டும்.
திறந்த பாத்திரங்கள், தொட்டிகளில் சுத்தமான தண்ணீர் வைப்பதை தவிர்க்க வேண்டும். குடிநீர் தொட்டிகளில் லார்வா புழுக்கள் இனப்பெருக்கம் செய்யாத வகையில் கண்காணிக்க வேண்டும்.டெங்கு காய்ச்சல் வந்த பின் சுகாதாரத்துறையினர் கொசு மருந்து தெளித்தல், குளோரினேஷன் செய்தல் போன்ற பணிகளை செய்வதை விட, காய்ச்சல் வருவதற்கு முன் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, மாவட்ட பூச்சியியல்வல்லுநர் ரமேஷ், வட்டாரமருத்துவ அலுவலர்பார்த்தசாரதி, வட்டார சுகாதார ஆய்வாளர் வீரையா ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE