பொது செய்தி

தமிழ்நாடு

பறவை கணக்கெடுப்பில் பள்ளி மாணவர் ஆர்வம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், நஞ்சராயன் குளத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் அருகே, 440 ஏக்கர் பரப்பில், நஞ்சராயன்குளம் உள்ளது. இங்கு, பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல், உணவு, நீர் இருப்பு போன்றவை உள்ளன. இதனால், ஐரோப்பா, ஆசியா கண்டங்கள், இமயமலை பகுதிகளில் இருந்து, குளிர்கால வலசை நிகழ்வாக, ஆண்டுதோறும், அக்., முதல்
 பறவை கணக்கெடுப்பில் பள்ளி மாணவர் ஆர்வம்

திருப்பூர்:திருப்பூர், நஞ்சராயன் குளத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் அருகே, 440 ஏக்கர் பரப்பில், நஞ்சராயன்குளம் உள்ளது. இங்கு, பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல், உணவு, நீர் இருப்பு போன்றவை உள்ளன. இதனால், ஐரோப்பா, ஆசியா கண்டங்கள், இமயமலை பகுதிகளில் இருந்து, குளிர்கால வலசை நிகழ்வாக, ஆண்டுதோறும், அக்., முதல் மார்ச் வரை ஏராளமான பறவையினங்கள் இக்குளத்துக்கு வருகின்றன.அதில், தமிழகத்தில் அரிதாக பதிவு செய்யப்படும் பறவைகளில், சிவப்பு தாரா வாத்துகள் வலசை வந்துள்ளன. தவிர, மேற்கு ஐரோப்பா மற்றும் சைபீரிய பகுதிகளில் காணப்படும் தட்டை வாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை போன்ற வாத்துகளும், மங்கோலிய ரஷ்ய பகுதியை சேர்ந்த பட்டை தலை வாத்து, கடற்கரை பறவைகளான மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி போன்ற பறவை, நஞ்சராயன் குளத்திற்கு குளிர்கால வலசையாக வந்துள்ளன.இப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு, திருப்பூர் இயற்கை கழகம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ''கடந்த, 12 ஆண்டுகளாக, திருப்பூர் இயற்கை கழகம் மூலம் நஞ்சராயன்குளத்தில் பறவைகளின் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X