இந்தியா

டிஜிட்டல் முறையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு : தொழில்நுட்ப கருவிகள் வாங்க கவர்னர் ஒப்புதல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: டிஜிட்டல் முறையில் காவலர் உடற்தகுதி தேர்வினை நடத்துவதற்காக தொழில்நுட்ப கருவிகளை ஜெம்போர்ட்டல் வழியாக வாங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த 2018-ம் ஆண்டு புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 390 போலீசார், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த
 டிஜிட்டல் முறையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு  : தொழில்நுட்ப  கருவிகள் வாங்க கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரி: டிஜிட்டல் முறையில் காவலர் உடற்தகுதி தேர்வினை நடத்துவதற்காக தொழில்நுட்ப கருவிகளை ஜெம்போர்ட்டல் வழியாக வாங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 390 போலீசார், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 4ம் தேதி முதல் நடைபெறும் என அரசு அறிவித்தது. இதனால், போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் உற்சாகத்துடன் பயிற்சியை தீவிரப்படுத்தினர்.இந்நிலையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு, மைக்ரோ சிப் முறைக்கு பதிலாக, விசில் முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இம்முறையில் முறைகேடு நடக்கும் என பல தரப்பிலும் புகார் எழுந்தது.இதனால், போலீஸ் உடல் தகுதி தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். மேலும், டிஜிட்டல் முறையில் காவலர் உடற் தகுதி தேர்வை நடத்த உத்தரவிட்டார்.இந்நிலையில் டிஜிட்டல் முறையில் போலீஸ் உடல் தகுதி தேர்வை நடத்துவதற்கான தொழில்நுட்ப கருவிகளை ஜெம்போர்ட்டல் வழியாக வாங்க உள்துறை, கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. இதற்கு கவர்னர் கிரண்பேடி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.எனவே விரைவில் போலீஸ் உடல் தகுதி தேர்விற்கான தொழில்நுட்ப கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட உள்ளது. இதன் பிறகே போலீஸ் உடல் தகுதி தேர்வு நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X