பொது செய்தி

தமிழ்நாடு

நாய்க்கு உணவிட சென்ற போது சுவர் இடிந்தது! உயிர் தப்பிய பெண்; 'தலை' காத்த தர்மம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூரில், தெரு நாய்க்கு உணவு அளிக்க சென்ற போது சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பெண் ஒருவர் உயிர் தப்பினார்.திருப்பூர், குமரப்புரம் - 4வது வீதியை சேர்ந்தவர் விசாலாட்சி, 28. பனியன் நிறுவனத்தில் டெய்லர். அவர், தான் வசிக்கும் பகுதியில் தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது உரிய வருமானமில்லாத நிலையில், தனது

திருப்பூர்;திருப்பூரில், தெரு நாய்க்கு உணவு அளிக்க சென்ற போது சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பெண் ஒருவர் உயிர் தப்பினார்.திருப்பூர், குமரப்புரம் - 4வது வீதியை சேர்ந்தவர் விசாலாட்சி, 28. பனியன் நிறுவனத்தில் டெய்லர். அவர், தான் வசிக்கும் பகுதியில் தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது உரிய வருமானமில்லாத நிலையில், தனது நகைகளை அடகு வைத்து இவர் தெரு நாய்களுக்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம், காலை, 7:00 மணியளவில், வழக்கம் போல் தனது வீடு தேடி வந்த தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதற்காக அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அந்த சில நொடிகளில் அவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. பழைய வீடு என்பதால், மண் சுவர்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஈரம் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது.தெரு நாய்க்கு உணவு அளிக்க வெளியே சென்றிருக்காவிட்டால், சுவர் இடிந்து அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இது அவர் வீட்டு முன் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 'செய்த தர்மம், தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றியது,' என அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X