பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் கை கொடுத்தால், வர்த்தகம் வசப்படும்! பின்னலாடை துறையினர் அழைப்பு; வருகை அதிகரிக்குமென எதிர்பார்ப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:கரம்கோர்த்து செயல்பட்டு, இழந்த வர்த்தகத்தை மீட்டெடுக்க, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என, திருப்பூர் பின்னலாடை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று, ஆடை தயாரிக்கின்றன. குறித்த காலத்துக்குள் ஆடைகளை தயாரித்து அனுப்பிவைப்பது மிகவும் அவசியமாகிறது. தாமதமாக

திருப்பூர்:கரம்கோர்த்து செயல்பட்டு, இழந்த வர்த்தகத்தை மீட்டெடுக்க, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என, திருப்பூர் பின்னலாடை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று, ஆடை தயாரிக்கின்றன. குறித்த காலத்துக்குள் ஆடைகளை தயாரித்து அனுப்பிவைப்பது மிகவும் அவசியமாகிறது. தாமதமாக அனுப்பும் ஆடைகளை, வெளிநாட்டு வர்த்தகர் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை.கப்பலுக்கு பதில், அதிக தொகை செலவில், விமானத்தில் ஆடைகளை அனுப்பிவைக்க நேரிடும். குறித்த நேரத்தில் ஆடைகளை உற்பத்தி செய்து அனுப்புவதற்கு, நிறுவனங்களில் தினசரி தொழிலாளர் வருகை சிறப்பாக அமைவது மிக முக்கியமானதாக உள்ளது.பனியன் தொழிலாளரை பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும், பொங்கல், தீபாவளியின்போது, கூடுதல் நாள் விடுமுறை எடுக்கின்றனர்; 15 முதல் 20 நாட்கள் வரை விடுப்பு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதனால், பண்டிகைக்கு பின், தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து, ஆடை உற்பத்தி வேகம் குறைந்துவிடுகிறது. கடந்த, 14ல் தீபாவளி கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களுக்கு, 13ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.ஆர்டர் அதிகமுள்ள சில ஏற்றுமதி நிறுவனங்கள், கடந்த 19ம் தேதி முதல் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன; மற்ற அனைத்து உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு; நிட்டிங், டையிங், பிரின்டிங் போன்ற ஜாப்ஒர்க் நிறுவனங்கள், சாயக்கழிவு சுத்திகரிப்பு மையங்கள் இன்று முதல் இயக்கத்துக்கு வருகின்றன.கடந்த ஆண்டுகள் போல், இந்த ஆண்டு இல்லை. கொரோனாவால், கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஆடை உற்பத்தி நடைபெறவில்லை. ஆர்டர் இழப்பு, ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகையை வர்த்தகர்களிடமிருந்து பெறுவதில் சிக்கல் என தொழில்முனைவோரும்; வேலை இழப்பு, வருவாய் இழப்பால் பின்னலாடை தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா கால இழப்புகளை ஈடு செய்ய, தொழில் முனைவோர், தொழிலாளர் என இருதரப்பினரும் கைகோர்த்து செயல்படவேண்டிய தருணம் இது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட வெளிநாடுகளிலிருந்து, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி அதிகளவில் வந்துகொண்டிருக்கின்றன. சீனாவுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்களும், திருப்பூர் நோக்கி திரும்பி வருகிறது.சேம்பிள் ஆடை தயாரித்து கொடுத்து, மொத்த ஆடை தயாரிப்பு ஆர்டரை கைப்பற்ற தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து, வர்த்தகத்தை கைப்பற்ற, தொழிலாளர் சக்தி மிக இன்றியமையாததாக உள்ளது. விடுமுறையை முடித்துக்கொண்டு, உடனடியாக பணிக்கு திரும்பி, உற்பத்தியை வேகமெடுக்கச்செய்வது, தொழிலாளரின் கடமை.பின்னலாடை துறையினர் கூறியதாவது:கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகள் படிப்படியாக விலகிவருகின்றன. தற்போது, தொழிலாளர் பற்றாக்குறை, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஏற்கனவே சொந்த ஊர் சென்று திரும்பியதால், பெரும்பாலான தொழிலாளர்கள், திருப்பூரிலேயே தீபாவளி கொண்டாடியுள்ளனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும், காலம் தாழ்த்தாமல், உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும்.தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றுள்ள வெளிமாவட்ட தொழிலாளர்கள், விரைவில் திருப்பூர் நோக்கி திரும்பவேண்டும். தொழிலாளர் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் இயங்க முடியாது. குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிக்கமுடியாமல், வர்த்தகத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X