பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யல் ஆற்று படுகையில் குப்பை மலை: வழக்கம்போல, அதிகாரிகள் 'கப்சிப்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மின்மயானம் அருகே, நொய்யல் ஆற்று படுகையில், மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரம் பாதிக்கிறது.ஒரு காலத்தில், நீர் பாசன ஆதாரங்களை விட, மழைகாலத்தில் கிடைக்கும் நீரை சேமித்தும், நிலத்தடி நீரை செறிவூட்டியே விவசாயிகள் பாசன வசதி அடைந்தனர். இதற்கு, திருப்பூரைக் கடந்து செல்லும் நொய்யல் முக்கிய காரணமாகும்.மழையின்போது, ஆற்றில் வரும்
 நொய்யல் ஆற்று படுகையில் குப்பை மலை: வழக்கம்போல,  அதிகாரிகள் 'கப்சிப்'

திருப்பூர்;திருப்பூர் மின்மயானம் அருகே, நொய்யல் ஆற்று படுகையில், மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரம் பாதிக்கிறது.ஒரு காலத்தில், நீர் பாசன ஆதாரங்களை விட, மழைகாலத்தில் கிடைக்கும் நீரை சேமித்தும், நிலத்தடி நீரை செறிவூட்டியே விவசாயிகள் பாசன வசதி அடைந்தனர். இதற்கு, திருப்பூரைக் கடந்து செல்லும் நொய்யல் முக்கிய காரணமாகும்.மழையின்போது, ஆற்றில் வரும் தண்ணீர், தடுப்பணை வாயிலாக முறையாக குளங்களில் ஆண்டு முழுவதும் சேமிக்கப்பட்டது. அவ்வாறு, பசுமையும், செழிப்புமாக இருந்த நொய்யல் ஆற்று படுகைகள், தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது, குளம், அவற்றின் நீர் வழித்தடங்களை மறிப்பது, பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை, வறண்ட நீர்நிலைகளில் கொட்டி வீணடிப்பது போன்ற செயல்கள் தொடர்கின்றன.திருப்பூர் மின்மயானம் அருகே, நொய்யல் ஆற்றுப்படுகையில், குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும் வழக்கம்போல, கண்டுகொள்ளாமல் உள்ளனர். கழிவுகள் அனைத்துமே நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில் கொட்டப்பட்டுள்ளது.தண்ணீரில் குப்பை கலந்து மாசு ஏற்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக அரசும், கோர்ட்டும் பலவிதமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆனால், நீர் நிலைகளையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும் வகையில் அதிகாரி கள் செயல்படுகின்றனர்.இப்பகுதியில், துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X