பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயில் இயக்க திட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சென்னை - கோவை, சென்னை - திருச்சி - மதுரை, சென்னை - திருவனந்தபுரம் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே பயணியர் கூட்டம் இல்லாததால், சென்னை - கோவை சதாப்தி சிறப்பு ரயில், வரும், 30ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் மற்றும் கேரளாவில், கூடுதல் ரயில் இயக்க, ரயில்வே

திருப்பூர்:ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சென்னை - கோவை, சென்னை - திருச்சி - மதுரை, சென்னை - திருவனந்தபுரம் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே பயணியர் கூட்டம் இல்லாததால், சென்னை - கோவை சதாப்தி சிறப்பு ரயில், வரும், 30ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் மற்றும் கேரளாவில், கூடுதல் ரயில் இயக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளதாகவும், இவை, இம்மாத இறுதிக்குள் இயக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.ரயில்வே வட்டாரத்தினர் கூறுகையில்,'சென்னை - திருவனந்தபுரம், சென்னை - நாகர்கோவில், சென்னை - ஐதராபாத், கோவை - நாகர்கோவில் உள்ளிட்ட, 14 ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு, மூன்று வாராந்திர ரயில்களும் இயக்கப்பட உள்ளன. மதுரை - பாலக்காடு, நாகர்கோவில் -கோவை பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரசாக மாற்றி இயக்கத்திற்கு வர உள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X