நெட் படம் -குழந்தை 2சி --- முதல், 28 நாள் மிக முக்கியம்! குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெட் படம் -குழந்தை 2சி --- முதல், 28 நாள் மிக முக்கியம்! குழந்தை வளர்ப்பில் 'டிப்ஸ்'

Added : நவ 22, 2020
Share
திருப்பூர்;'குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு, அவர்களின் முதல், 28 நாள் வளர்ச்சி என்பது, மிக முக்கியமானது' என, குழந்தைகள் வார விழாவில் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர், பெரிச்சிபாளையம் தலைமை அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த ஒரு வாரமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கர்ப்பிணிகள், தாய்மார்கள், வார்டு

திருப்பூர்;'குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு, அவர்களின் முதல், 28 நாள் வளர்ச்சி என்பது, மிக முக்கியமானது' என, குழந்தைகள் வார விழாவில் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர், பெரிச்சிபாளையம் தலைமை அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை வார விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடந்த ஒரு வாரமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கர்ப்பிணிகள், தாய்மார்கள், வார்டு செவிலியர்கள், நர்சிங் மாணவியருக்கு, குழந்தை பராமரிப்பு, தடுப்பூசியின் நன்மைகள், தாய்ப்பாலின் நன்மை, தாய்மாருக்கு ஏற்ற ஊட்டச்சத்து, பிறவி குறைபாடு கண்டறிதல், உரிய சிகிச்சையளித்தல் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.இறுதிநாளான நேற்று, மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல டாக்டர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில்,'கர்ப்பிணிகள், மகப்பேறு காலத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் சரியான சமயத்தில், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சர்க்கரை உள்ளிட்ட கர்ப்பகால பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியத்துக்கு முதல், 28 நாள் வளர்ச்சி முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், தாய்,சேய் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைக்க முடியும்,' என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X