அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு நிதியுதவி அமித் ஷாவிடம் 3 கடிதம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:'நதிகள் இணைப்பு திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முதல்வர் பழனிசாமி., மூன்று கடிதங்கள் கொடுத்தார்.அந்தக் கடிதங்களில், முதல்வர் கூறியிருப்பதாவது:*கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும்படி,

சென்னை:'நதிகள் இணைப்பு திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முதல்வர் பழனிசாமி., மூன்று கடிதங்கள் கொடுத்தார்.

அந்தக் கடிதங்களில், முதல்வர் கூறியிருப்பதாவது:*கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும்படி, ஜல்சக்தி துறைக்குஅறிவுறுத்த வேண்டும்
* காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை, 8,277 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்கள் பயனடையும். இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து, நிதியுதவி வழங்க வேண்டும்
* 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்திற்கு, 10 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை, மாநில அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்
* மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, மெகா ஜவுளி தொழில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில், மெகா ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்

* சென்னை அருகே, மருத்துவ பூங்கா மற்றும் மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைக்க வேண்டும்l சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் மதிப்பில், 118.9 கிலோ மீட்டருக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும். எனவே, திட்ட மதிப்பீட்டில், 50 சதவீதத்தை வழங்க வேண்டும். இவ்வாறு, கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X