சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூங்காவா... பார்க்கிங் இடமா? இப்படியும் இடம் 'அபேஸ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருநகர் காலனி முன், ரோட்டோரம் முள்வேலி அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி நிறுத்தப்பட்டது.திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி எதிரே, திருநகர் காலனி உள்ளது; நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதிக்கு வெளியே, ரோட்டோரம், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த பல ஆண்டாக, இந்த இடத்தில் செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன.

குடியிருப்புவாசிகள், தங்கள் வாகனங்களை 'பார்க்கிங்' செய்து வந்தனர்.சமீபத்தில், இந்த வழியில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக, அங்கிருந்த செடி, மரங்கள் அகற்றப்பட்டன; தற்போது கட்டுமானப்பணி நிறைவடைந்துள்ளது.இந்நிலையில், அங்குள்ள காலியிடத்தில், முள்வேலி அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. 'அங்கு, சாலையோர பூங்கா அமைத்து, செடி வளர்க்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'வேலி அமைத்து இடத்தை மறித்தால், ரோடு பாதிக்கப்படும். திருநகர் வீடுகளில் வசிப்போர் தங்கள் வாகனங்கள் நிறுத்த மட்டுமே இது பயன்படும். பள்ளி நாட்களில், ஜெய்வாபாய் பள்ளி மாணவியர், அங்கு நின்று தான் பஸ் ஏற வேண்டும். மாணவியர், அங்கு சைக்கிள் நிறுத்துவது பாதிக்கப்படும்,'' என்றனர்.மாநகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று, பிரச்னையை அறிந்தனர். 'உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காணப்படும்' என, அதிகாரிகள் கூறினர். அதுவரை, வேலி மற்றும் பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X