கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில்கள் நிதியில் வாங்கிய வாகனங்கள் எவை?

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:கோவில்களின் நிதியில் வாங்கப்பட்ட கார்கள், அவற்றை பயன்படுத்தும் அதிகாரிகளின் விபரத்தை, அறநிலையத் துறை சேகரித்து வருகிறது.கிராம கோவில்களை சீரமைக்க, பெரிய கோவில்களின் உபரி வருவாயில் இருந்து, 10 கோடி ரூபாய் ஒதுக்க, அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், அறங்காவலர்கள் இன்றி, நிதியை மாற்றுவதற்கும், பயன்படுத்துவதற்கும், அரசுக்கு தடை

சென்னை:கோவில்களின் நிதியில் வாங்கப்பட்ட கார்கள், அவற்றை பயன்படுத்தும் அதிகாரிகளின் விபரத்தை, அறநிலையத் துறை சேகரித்து வருகிறது.

கிராம கோவில்களை சீரமைக்க, பெரிய கோவில்களின் உபரி வருவாயில் இருந்து, 10 கோடி ரூபாய் ஒதுக்க, அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், அறங்காவலர்கள் இன்றி, நிதியை மாற்றுவதற்கும், பயன்படுத்துவதற்கும், அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என, கோரப்பட்டது.

இம்மனுக்கள், விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில், '29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், அறங்காவலர்கள் இல்லை. கோவில் நிதியில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், வாகனங்கள் வாங்குகின்றனர்' என, கூறப்பட்டது.விசாரணையின் போது, 'அதிகாரிகளுக்கு வாகனங்கள் வாங்க, கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்; புதிய கார்கள் வாங்கப்பட்டு, எங்கு செல்கின்றன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கூடுதல் கமிஷனர் திருமகள், நம் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: அறநிலைய துறை அலுவலர்களுக்கு கார் வாங்க, கோவில் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதா; அவ்வாறு வாங்கப்பட்டிருந்தால் அதன் விபரம்; கோவிலுக்கு சொந்தமான கார்கள், அறநிலைய துறை அலுவலர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தால், அதன் விபரம் ஆகியவை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X