பொது செய்தி

தமிழ்நாடு

பீட்ரூட் பயிரிட்டு, புது ரூட்! பொங்கலூர் விவசாயிகள் 'குஷி'

Added : நவ 22, 2020
Share
Advertisement
பொங்கலுார்:நல்ல விலை கிடைப்பதால், பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குறுகிய கால பயிராக, பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவு செய்த, 45வது நாளில் அறுவடைக்கு தயாராகி விடும். பெரியளவில் பூச்சி தாக்காது; ஆண்டு முழுக்க விளைவிக்க முடியும்.பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினம் குறைவு என்பதால், அதிகளவு விவசாயிகள், பீட்ரூட்
 பீட்ரூட் பயிரிட்டு, புது ரூட்! பொங்கலூர் விவசாயிகள் 'குஷி'

பொங்கலுார்:நல்ல விலை கிடைப்பதால், பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குறுகிய கால பயிராக, பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவு செய்த, 45வது நாளில் அறுவடைக்கு தயாராகி விடும். பெரியளவில் பூச்சி தாக்காது; ஆண்டு முழுக்க விளைவிக்க முடியும்.பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினம் குறைவு என்பதால், அதிகளவு விவசாயிகள், பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய முடியும். நீலகிரி போன்ற மலை பகுதியில் மட்டுமே விளைந்த பீட்ரூட்டை, தற்போது நமது மாவட்ட விவசாயிகள் வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகின்றனர். மார்க்கெட்டில் கிலோ, 40 ரூபாய்க்கு விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஊட்டியில் விளையும் பீட்ரூட், நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். உள்ளூர் பீட்ரூட், நிறம் சற்று குறைவாக இருக்கும். வழக்கமாக கிலோ, 10 முதல், 20 ரூபாய் வரை விலை போகும். இந்தாண்டு, கட்டுப்படியாகும் விலை கிடைக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X