பொது செய்தி

தமிழ்நாடு

2019ல் மாயமானகாதல் ஜோடி கண்டுபிடிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 2019ல் தலைமறைவான காதலர்களை வெளிமாவட்டங்களில் போலீசார் தேடிய நிலையில் தற்போது உள்ளூரில் இருப்பது தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கணக்கெடுத்து, நிலுவை வழக்குகளை விசாரிக்க எஸ்.பி.,கார்த்திக் உத்தரவிட்டுஉள்ளார்.இதனையடுத்து ராமநாதபுரம் நகர் போலீசார் 2019 மார்ச்சில் சீதக்காதி நகரைச் சேர்ந்த சிராஜீதீன் மகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 2019ல் தலைமறைவான காதலர்களை வெளிமாவட்டங்களில் போலீசார் தேடிய நிலையில் தற்போது உள்ளூரில் இருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கணக்கெடுத்து, நிலுவை வழக்குகளை விசாரிக்க எஸ்.பி.,கார்த்திக் உத்தரவிட்டுஉள்ளார்.இதனையடுத்து ராமநாதபுரம் நகர் போலீசார் 2019 மார்ச்சில் சீதக்காதி நகரைச் சேர்ந்த சிராஜீதீன் மகள் சுலையம்மரியா 19, காணாமல் போனது குறித்து விசாரித்தனர்.இதில், மரவைக்குளத்தைச் சேர்ந்த ஆரிப்உசேன் 24, என்பவரை காதல் திருமணம் செய்ததுதெரியவந்தது. 2019ல் காணாமல் போன காதலர்களை பல்வேறு மாவட்டங்களில் தேடி அலைந்தும் கிடைக்காததால் தேடுதலை போலீசார் கைவிட்டனர்.

தற்போது எஸ்.பி., உத்தரவில் மீண்டும் விசாரணையில் காதல்ஜோடி மரவைக்குளத்தில் குழந்தையுடன் வாழ்ந்து வருவது தெரியவந்தது. ஆரீப்கான், சுலையம்மரியா, அவர்களது பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். உள்ளூரில் இருந்து கொண்டு தகவல் தராமல் இருந்தவர்களை போலீசார் கண்டித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X