சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் கனமழை எச்சரிக்கை 3500பேர் அடங்கிய மீட்பு குழு அமைப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நவ.,23, 24 கனமழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ., 23 கனமழையும், நவ., 24 முதல் 26 வரை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் எளிதாகமழைநீர் தேங்கும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நவ.,23, 24 கனமழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ., 23 கனமழையும், நவ., 24 முதல் 26 வரை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் எளிதாகமழைநீர் தேங்கும் இடங்கள், சாலை போக்குவரத்து பாதிக்கும் பகுதிகள்கண்டறிய வேண்டும். வெள்ளம், புயல் போன்ற பேரிடர் ஏற்படும் பட்சத்தில் மீட்டு தங்க வைக்க 32 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.429 ஊராட்சிகளில் மீட்புபணிகளை மேற்கொள்ள மொத்தம் 3500 பணியாளர்களை கொண்ட 135 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்பு குறித்து 1077 மற்றும் 04567 - 230 060 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்,' என்றார்.டி.ஆர்.ஓ., சிவகாமி, எஸ்.பி., கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X