பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: இளைஞர் மத்தியில் ஆர்வம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வாக்காளர் சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்கக்கோரி, இளைஞர், இளம்பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.சட்டசபை தேர்தல் எதிர்வர இருப்பதால், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், ஜனநாயக கடமையாற்றலாம் என காத்திருக்கும் இளைஞர்கள், தங்களது பெயரை, வாக்காளர்
 வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: இளைஞர் மத்தியில் ஆர்வம்

திருப்பூர்;சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வாக்காளர் சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்கக்கோரி, இளைஞர், இளம்பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.சட்டசபை தேர்தல் எதிர்வர இருப்பதால், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், ஜனநாயக கடமையாற்றலாம் என காத்திருக்கும் இளைஞர்கள், தங்களது பெயரை, வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில் உள்ள, 2,493 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது; இரண்டாவது நாளாக இன்றும் நடக்கிறது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், முககவசம் அணிந்து, சிறப்பு முகாம்களில் ஆஜராகியிருந்தனர்.பொதுமக்கள், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தங்களது குடும்ப வாக்காளர் விவரத்தை சரிபார்த்துக்கொண்டனர். வரும் 2021 ஜன., மாத நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், ஆர்வத்துடன் வந்து, படிவங்களை வாங்கி சென்றனர்.கலெக்டர் விஜய கார்த்திகேயன், அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை ஆய்வு செய்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் வாசுகி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவீந்திரன் உடனிருந்தனர்.வாக்காளரிடம் பெறப்படும் படிவங்களை பிரித்து வைக்க வேண்டும். காலதாமதம் செய்யாமல், உடனுக்குடன் பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகளை மேற்கொள்ள, விரைவில் பரிந்துரைக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.சட்டசபை தேர்தல் நெருங்குவதால், பட்டியல் திருத்த பணிக்கு, மாவட்ட தேர்தல் பிரிவு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம், துணை கலெக்டர்களை நியமித்து, சிறப்பு முகாம் பணிகளை மேலாய்வு செய்தது. மேலும், துணை தாசில்தார்கள் மண்டல அலுவலராக நியமித்தும், சிறப்பு முகாம் பணிகள் கண்காணிக்கப்பட்டன.13,120 பேர் மனுதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் நேற்று நடந்த முகாமில், 13 ஆயிரத்து, 120 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்க்க (படிவம் -6), 10 ஆயிரத்து, 293 பேர்; பெயர் நீக்கம் கோரி (படிவம் -7), 812 பேர்; திருத்தம் கோரி (படிவம் -8), 1,312 பேர்; ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் வேண்டி (படிவம் -8ஏ) 703 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X