கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆவின் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு: ஐகோர்ட்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய, அவர்களின் விருப்பத்தை கேட்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தில், மோகனரங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு:ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றேன். என்னை போன்றவர்கள், மருத்துவ உதவி கிடைக்காமல்

சென்னை:ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய, அவர்களின் விருப்பத்தை கேட்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில், மோகனரங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு:ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றேன். என்னை போன்றவர்கள், மருத்துவ உதவி கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.


அமல்படுத்த வேண்டும்

ஆவின் ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும், மருத்துவ காப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தும்படி, நிர்வாகத்திடம் கோரினேன்.இது குறித்து, 2020 ஜூனில் மனு அனுப்பினேன். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, எங்களுக்கு அமல்படுத்த வேண்டும்.என் மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, ஆவின் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆவின் சார்பில், சிறப்பு பிளீடர் பாலரமேஷ், ''அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் சம்பளம், பென்ஷன் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.''அதனால், திட்டம் சாத்தியப்படுகிறது. ஆவின் நிறுவன ஓய்வூதியதாரர்கள், அதிகம் பேர் பங்களித்தால் தான், சாத்தியமாகும்,'' என்றார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சிலம்பரசன் ஆஜராகி, ''ஆவின் நிறுவன ஓய்வூதியதாரர்கள் பெரும்பாலானோர், பென்ஷன் தொகையில் இருந்து மாதம்தோறும் வழங்க தயாராக உள்ளனர். அதனால், மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை வகுக்கலாம்,'' என்றார்.


அறிவிப்பு

மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:முதலில், மனுதாரர் போல உள்ளவர்களின் விருப்பத்தை, ஆவின் நிறுவனம் கோர வேண்டும். ஓய்வூதியதாரர்களில், 60 சதவீதத்துக்கும் அதிகமானோர், மாதம்தோறும் பங்களிப்பு செய்ய முன்வந்தால், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த, ஆவின் நிறுவனம் வகை செய்ய முடியும்.

எனவே, பென்ஷன் தொகையில் இருந்து, மாதம்தோறும் குறிப்பிட்ட பணத்தை தர விருப்பத்தை கோரி, ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட வேண்டும்.பெரும்பான்மை அளவுகோலாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் என, வைத்துக் கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனத்துடன், ஆவின் நிறுவனம் பேச்சு நடத்தி, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

சாத்தியக்கூறு ஏற்பட்டால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான திட்டம் இருப்பது போல, ஆவின் நிறுவன ஓய்வூதிய தாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தலாம்.எனவே, ஆறு மாதங்களில், ஓய்வூதியதாரர்களின் விருப்பத்தை, ஆவின் நிறுவனம் கோர வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X