அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் அ.தி.மு.க., ஆர்வம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கன்னிவாடி : ஆத்துார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கவனிப்பதில், அ.தி.மு.க.,வினர் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். சட்டசபை தேர்தல் பணிகள், கட்சி தாவல், ஆள் சேர்ப்பு, பிரமுகர்கள் சந்திப்பு என களைகட்டியுள்ளது. ஆத்துார் தொகுதியில் கட்சி மாறி சேர்த்ததாக, சமூகவலைத்தளங்களில் அ.தி.மு.க., தி.மு.க., இடையே விளம்பர யுத்தம் நடக்கிறது. இதற்கு இணையாக, பா.ஜ.,வினரும் தீவிரம்

கன்னிவாடி : ஆத்துார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கவனிப்பதில், அ.தி.மு.க.,வினர் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்.

சட்டசபை தேர்தல் பணிகள், கட்சி தாவல், ஆள் சேர்ப்பு, பிரமுகர்கள் சந்திப்பு என களைகட்டியுள்ளது. ஆத்துார் தொகுதியில் கட்சி மாறி சேர்த்ததாக, சமூகவலைத்தளங்களில் அ.தி.மு.க., தி.மு.க., இடையே விளம்பர யுத்தம் நடக்கிறது. இதற்கு இணையாக, பா.ஜ.,வினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.இச்சூழலில் ஓட்டுச்சாவடி வாரியாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த பணிகளை நேற்று முதல் தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. இப்பணியில் வழக்கத்தைவிட அ.தி.மு.க.,வினர் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். \

ஆத்துார் தொகுதி ஓட்டுச்சாவடி வாரியாக நிர்வாகிகளை நியமித்து புதிய சேர்த்தல், நீக்கம், வார்டு மாறிய ஓட்டுகள் குறித்து பட்டியல் இடுகின்றனர். முக்கிய நிர்வாகிகளின் ஓட்டுச்சாவடி 'விசிட்' படங்கள், சமூக வலைத்தள குழுக்களில் நேற்றைய டிரெண்டாகி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X