பொது செய்தி

தமிழ்நாடு

கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் புறநகர் ரயில்களில் பெண்களுக்கு அனுமதி

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க, தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:புறநகர் மின்சார ரயில்களில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களை சேர்ந்த, சுகாதார, துப்புரவு பணியாளர்கள், அத்தியாவசிய பொருள்களை கையாள்வோர், சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பயணிக்க

சென்னை:கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க, தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:புறநகர் மின்சார ரயில்களில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களை சேர்ந்த, சுகாதார, துப்புரவு பணியாளர்கள், அத்தியாவசிய பொருள்களை கையாள்வோர், சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணி புரிவோர், சரக்கு மற்றும் பயணியர் போக்கு வரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்று வோரும், மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.இதற்காக, 244 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை, கொரோனா தொற்றுக்கு முந்தைய சேவையில், 40 சதவீதம்.தற்போது, அத்தியாவசிய சேவையின் கீழ் வராத பெண் பயணியர், புறநகர் மின்சார ரயில்களில், நாளை முதல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, அதிகாலை முதல் காலை, 7:00 மணி வரை; காலை, 10:00 முதல் மாலை, 4:30 மணி வரை; இரவு, 7:30 முதல், ரயில் சேவை முடியும் வரை பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை முழுதும் பயணிக்கலாம்.இந்த நேரங்களில், மாதாந்திர டிக்கெட் அல்லது எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறுகின்றனரோ, அங்கு டிக்கெட் பெற்று பயணிக்கலாம். அவர்களுடன், 12 வயது வரையுள்ள குழந்தைகளும் பயணிக்கலாம்.காலை, 7:00 முதல், 10:00 மணி வரை; மாலை, 4:30 முதல், இரவு, 7:30 மணி வரையும், பெண்கள் பயணிக்க அனுமதி கிடையாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X