சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த யோசனை

Added : நவ 22, 2020
Share
Advertisement
காரைக்குடி : வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் கீழ் சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பாணான்வயல் மற்றும் முள்ளங்காடு கிராமங்களில் நடந்தநிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகஜெயந்திபேசுகையில்,

காரைக்குடி : வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் கீழ் சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

பாணான்வயல் மற்றும் முள்ளங்காடு கிராமங்களில் நடந்தநிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகஜெயந்திபேசுகையில், சாக்கோட்டை வட்டாரத்தில்இதுவரை நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பரவலாக நெற்பயிரில் துத்தனாகசத்து பற்றாக்குறை அறிகுறி உள்ளது. இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 5 கிலோ நெல் நுண்ணுரம் அல்லது 10கிலோ துத்தநாக சல்பேட்உரமிட வேண்டும். தற்போது நல்ல மழை பெய்து வருவதால்நெற்பயிரில்ஆனைக்கொம்பன் மற்றும் இலைசுருட்டு புழுக்களின் தாக்குதலின் அறிகுறியும் உள்ளது.

இதற்கு ஏக்கர் ஒன்றுக்குகுளோரிபைரிபாஸ் 20 சதவீதம் ஈ.சி., 500 மி.லி அல்லது பெப்ரோனில் 5சதவீதம்எஸ்.சி. 400 மி.லி அல்லது தயாமீதாக்சிம் 25 சதவீதம் 40கிராம் என்ற அளவில் தெளிக்கலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X