சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தில் மலைப்பாம்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். இவ்வொன்றிய அலுவலகத்தை நவ.19ம் தேதி மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி சுற்றி பார்த்தார். அப்போது அங்கு வளர்ந்திருந்த புதர் செடிகளை அகற்ற ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களாக மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அலுவலக வளாகம் சுத்தம்

சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

இவ்வொன்றிய அலுவலகத்தை நவ.19ம் தேதி மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி சுற்றி பார்த்தார். அப்போது அங்கு வளர்ந்திருந்த புதர் செடிகளை அகற்ற ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களாக மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அலுவலக வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.நேற்று இப்பணி நடந்த போது அலுவலகத்தை ஒட்டியுள்ள புதருக்குள் இருந்து 10 அடி நீள மலைப்பாம்பு வெளியே வந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து பிரான்மலை வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X