பொது செய்தி

தமிழ்நாடு

தேவை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி மற்றும் எஸ்.பி., ரவளிபிரியா இருவரும் பொறுப்பேற்றபின் பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. பழைய வழக்குகள் பலவற்றுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மீதான நடவடிக்கைகள், பொதுமக்களின் குறைகளை நேரில் சென்று விசாரித்தல் என பல விஷயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் கொலை

திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி மற்றும் எஸ்.பி., ரவளிபிரியா இருவரும் பொறுப்பேற்றபின் பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. பழைய வழக்குகள் பலவற்றுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மீதான நடவடிக்கைகள், பொதுமக்களின் குறைகளை நேரில் சென்று விசாரித்தல் என பல விஷயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக முன்விரோதம் காரணமாக நடப்பவை அதிகமாக உள்ளது. மேட்டுப்பட்டியில் தி.மு.க., பிரமுகர், நாகல்நகரில் கூலித் தொழிலாளி, நத்தத்தில் இடப்பிரச்சனை காரணமாக, பழநியில் துப்பாக்கிச் சூடு என கடந்த 50 நாட்களில் 10 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.இதில் சில வழக்குகள் நீதிமன்றத்திலும், போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டும் இருந்தவை.

முன்விரோதம் காரணமாக நடப்பவை குறித்து அறிய உளவுப் போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொலை குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் உடனடியாக கண்டுபிடித்து விடுகின்றனர். இருப்பினும், வாரத்திற்கு ஒரு கொலை என்பது வாடிக்கையாகி வருவதால், தொடரும் முன்விரோத குற்றங்களை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X