பொது செய்தி

தமிழ்நாடு

பளிச்சிடும் வானிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Added : நவ 22, 2020
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று பளிச்சிடும் வெயில் நீடித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் கடந்த வாரம் முதல் இடைவிடாது மழை பெய்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பயணிகள் சுற்றுலா தலங்களை முழுமையாக காண முடியாத அளவு மழையின் தாக்கம் இருந்தது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் அனைவரும் விடுதிகளில் முடங்கினர்.நேற்று காலை முதலே கடும் வெயில்

கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று பளிச்சிடும் வெயில் நீடித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த வாரம் முதல் இடைவிடாது மழை பெய்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பயணிகள் சுற்றுலா தலங்களை முழுமையாக காண முடியாத அளவு மழையின் தாக்கம் இருந்தது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் அனைவரும் விடுதிகளில் முடங்கினர்.நேற்று காலை முதலே கடும் வெயில் நீடித்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, குணா குகை பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மாலையில் தோட்டக்கலைத்துறை பூங்காக்களிலும் ஏராளமானோர் குவிந்தனர். இதமான சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X