பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில்24 மணிநேரமும் பிரசவம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் கமலாநேரு, மரியநாதபுரம், சவேரியார்பாளையம் மற்றும் பழநி ரோடு பகுதிகளில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் கமலாநேருவில் மட்டுமே அதிக அளவில் பிரசவம் பார்க்கப்படுகிறது.அடுத்து அரசு மருத்துவமனையில் அதிகளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் கமலாநேரு, மரியநாதபுரம், சவேரியார்பாளையம் மற்றும் பழநி ரோடு பகுதிகளில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் கமலாநேருவில் மட்டுமே அதிக அளவில் பிரசவம் பார்க்கப்படுகிறது.அடுத்து அரசு மருத்துவமனையில் அதிகளவு பிரசவங்கள் நடக்கிறது. சவேரியார்பாளையம் சுகாதார நிலையத்தில் கட்டட வேலைகளால் சில மாதங்களாக பேறுகால சிகிச்சைகள் நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் அதிகளவில் கமலா நேருவிற்கே செல்கின்றனர்.கொரோனா காலத்தில் அனைவரும் ஒரே இடத்திற்கு செல்வது பாதுகாப்பு இல்லை.

எனவே, பொதுமக்களின் வசதிக்காக தற்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவ சிகிச்சை 24 மணிநேரமும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் விஜயலட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் பாலசந்திரன் ஏற்பாட்டில் சுகாதார ஆய்வாளர் லட்சியவர்ணா இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். நேற்று பழநி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்முதலின் பேறுகால சிகிச்சை அளிக்கப்பட்டு, சுகப்பிரசவம் நடந்தது. அதேபோல், மரியநாதபுரம் உட்பட பிற இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர் கூறுகையில், ''இந்தப்பிரிவு 24 மணி நேரமும் செயல்படும். வரும் காலங்களில் முழுமையாக அனைத்து உபகரணங்களும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்பே சிகிச்சை அளிக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X