பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்:  

Added : நவ 22, 2020
Share
Advertisement
தி.மு.க.,வினர் மறியல்348 பேர் கைதுசிவகங்கை: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் மறியல் செய்த 348 பேரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அரண்மனைவாசலில்நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் வடக்கு முத்துராமலிங்கம், தெற்கு ஜெயராமன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேதுபதிராஜா உட்பட 61 பேர்,

தி.மு.க.,வினர் மறியல்348 பேர் கைதுசிவகங்கை: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் மறியல் செய்த 348 பேரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அரண்மனைவாசலில்நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் வடக்கு முத்துராமலிங்கம், தெற்கு ஜெயராமன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேதுபதிராஜா உட்பட 61 பேர், காரைக்குடியில் நகர் செயலாளர் குணசேகரன் தலைமையில் 38 பேர்.காரைக்குடி அருகே கோவிலுாரில், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் 21 பேர், இளையான்குடியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன் தலைமையில் 57 பேர், திருப்புத்துாரில் இளைஞரணிமாவட்ட துணை செயலாளர் ரவி தலைமையில் 37 பேர், சிங்கம்புணரியில் ஒன்றிய செயலாளர் பூமணி தலைமையில் 30 பேர், மானாமதுரையில் ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகர் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் 64 பேர், திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் தலைமையில் 40 பேர் என மாவட்ட அளவில் மறியலில் ஈடுபட்ட 348 பேரை போலீசார் கைது செய்தனர்.முதல்வர் காப்பீடு அட்டைபெற்றுத்தருவதாக மோசடிஎஸ்.வி.மங்கலம்: சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் ரவி 47. இவர் இ- சேவை மையம் நடத்தி வருகிறார். மூவன்பட்டிக்கு சென்றவர், அங்குஉள்ளவர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அட்டை பெற்றுத்தருவதாக கூறி, தலா நபரிடம் ரூ.100 வரை என 18 பேரிடம் ரூ.1800 வசூல் செய்துள்ளார். ஏ.காளாப்பூர் வி.ஏ.ஓ., அருண் எஸ்.வி., மங்கலம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., கணேசன், மோசடியில் ஈடுபட்ட ரவியை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X